அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும்சன்பிக்சர்ஸ்தயாரிக்கும்ஜெயிலர்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்குஅனிருத்இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர்சிவராஜ் குமார்,ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு,வசந்த்ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம்ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கியஜெயிலர்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்ஜெயிலர்படத்தின் தீம் பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிஜெயிலர்கதாபாத்திரத்தில்நடிப்பதாககூறப்படும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் தீம் பாடலைஅனிருத்வடிவமைத்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளில்வெவ்வேறுதீம் பாடல்களும் இருப்பதாகசினிமாவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.