Advertisment

ஜெயிலர் - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

jailer ott release update

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டி ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு சொல்ல, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்தார் ரஜினி. ரஜினியை தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்துள்ளார். படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புதற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 7 ஆம் தேதி (07.09.2023) இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Actor Rajinikanth amazon prime
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe