ஜெயிலர் படத்தில் சில காட்சிகளை நீக்குக - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

jailer movie rcb jersey issue

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.525 கோடி வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ரூ.600 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியின் ஜெர்ஸியை குணச்சித்திர நடிகர்கள் அணிந்து வரும் காட்சியில், பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் ஒருவர் சில கருத்துக்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் அணிக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அக்காட்சி அமைந்துள்ளதாகவும் அணியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்சிபி அணி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும். மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Actor Rajinikanth delhi high court
இதையும் படியுங்கள்
Subscribe