Advertisment

'பத்திக்க வைக்கும் போதையா... ' - ஜெயிலரில் ரஜினியுடன் தமன்னா குத்தாட்டம்

jailer first single kaavaalaa released

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும்தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத ஷில்பா ராவ் மற்றும் அனிருத் பாடியுள்ளனர்.இப்பாடலில்தமன்னா டான்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அவருடன் ரஜினியும் நடனமாடுகிறார். ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 'கொஞ்சம் தயங்காதப்பா... கொஞ்சம் அடங்க வேணாம்பா...', 'பத்திக்க வைக்கும் போதையா... கண்ணுக்குள்ள நீ சேதி சொல்லப்பா...' போன்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெறுகிறது.

anirudh Actor Rajinikanth Tamanna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe