ஜெயிலில் ஆக்ஷனை தொடங்கிய ரஜினி; வெளியான ஃபர்ஸ்ட் லுக் 

jailer first look poster out now

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த் மாஸாகதோன்றியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாககூறப்படுகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனத்தெரிகிறது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe