jailer audio launch update

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் 'காவாலா' மற்றும் 'ஹுக்கும்' (Hukum) பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'ஹுக்கும்' பாடல் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ரஜினி நடிப்பில் கடைசியாகவெளியான 'அண்ணாத்த' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. அதற்கு முன்பு வெளியான 'தர்பார்' படத்தின் இசை வெளியீடு நடந்தது.அதில் பேசிய ரஜினியின் பேச்சு வைரலானது. அதைத்தொடர்ந்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.