jail movie full album out on december 3rd

Advertisment

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும்நிறைவடைந்த நிலையில், படத்தைத்திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ்நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ad

இந்நிலையில், படத்தின் பாடல்கள் குறித்தஅறிவிப்பைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், "‘ஜெயில்’ படத்தின்இசை ஆல்பம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும்" எனக்குறிப்பிட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 9ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment