'ஜெய் பீம்' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

suriya

2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 22ஆம் தேதி ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜெய் பீம் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, யூடியூப் தளத்தில் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங் வரிசையில் 10ஆம் இடத்தில் நீடிக்கிறது.

actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe