Advertisment

'ஜெய் பீம்' தொடரும் விருது வேட்டை

JaiBhim Officially Selected Tiantan Awards 12th Beijing International Film Festival

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினர். ஆனால் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு ஏகப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச திருவிழாவில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி 12 வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது. இப்படம் ஏற்கனவே நோய்டா திரைப்பட விழா, மற்றும் தாதாசாகேப் பல்கே சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor surya jai bhim
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe