Advertisment

"இது யார் மியூசிக் என்று கேட்டார்... உண்மையை சொன்னதும் ஷாக்காகிவிட்டார்" - நடிகர் ஜெய் கிண்டல் 

Jai

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வீரபாண்டியபுரம்'. இசையமைப்பளாராக நடிகர் ஜெய் அறிமுகமாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

Advertisment

விழாவில் நடிகர் ஜெய் பேசுகையில், "2002ஆம் ஆண்டிலிருந்தே மியூசிக் கற்றுக்கொண்டு இருந்தாலும் படத்திற்கோ விளம்பரப் படத்திற்கோ இசையமைக்க எந்த முயற்சியும் எடுத்ததில்லை. முதன்முதலில் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸுக்காக இசையமைத்தேன். அந்த இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வரும்போது நான் மியூசிக் போட்டுக்கொண்டு இருந்தேன். கதைச்சொல்லி முடித்துவிட்டு, வரும்போது ஒரு மியூசிக் கேட்டதே அது நீங்கதான் போட்டீங்களா என்றார். நான் அவரிடம் ஒரு பாடலை வாசித்துக் காட்டினேன். ரொம்ப நல்லா இருக்கு என்று கூறி எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

Advertisment

பின், அந்த வெப் சீரிஸில் உள்ள ஒரு காதல் தோல்வி பாடலுக்கு இசையமைத்து தரமுடியுமா என்று கேட்டார். நான் இசையமைத்து தருகிறேன். நன்றாக இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறினேன். அது அவருக்கு பிடித்ததும் வெப் சீரிஸில் பயன்படுத்திக் கொண்டார். மிக்ஸிங்-க்காக அந்தப் பாடலை சுசீந்திரன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த சுசீந்திரன் சார், இது யாரு மியூசிக் என்று கேட்டார். நான்தான் இசையமைத்தேன் என்று கூறியதும் நீங்களா என்று ஷாக்காகிவிட்டார்.

மறுநாள் காரில் போகும்போது, நம்முடைய அடுத்த படத்திற்கு நீங்களே இசையமைக்கிறீங்களா என்று கேட்டார். கிண்டலுக்காக கேட்கிறார் என்று நினைத்து எதுவும் கேமரா இருக்கிறதா என்று சுற்றிச்சுற்றி பார்த்தேன். உண்மையிலேயே கேட்கிறார் என்று தெரிந்ததும், இல்ல சார்... படத்துக்கு இசையமைக்கிற அளவுக்கு என்னிடம் திறமையில்லை என்று கூறினேன். அப்படியெல்லாம் இல்லை சும்மா ஜாலியா பண்ணுங்க என்றார். அப்படித்தான் இந்தப் படத்திற்குள் நான் இசையமைப்பாளராக வந்தேன். இசையமைக்க இனி எந்த வாய்ப்பு வந்தாலும் சிறப்பாக இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது" எனக் கூறினார்.

director suseenthiran jai music composer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe