/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_281.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜெய், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்நடிப்பில் கடைசியாக வெளியான 'கேப்மாரி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத்தொடர்ந்துஇயக்குநர் சுசீந்திரன் இயக்கும் 'சிவசிவா' படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக புது அவதாரம்எடுத்துள்ளார். இப்படத்தின் 'அம்மம்மா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இயக்குநர் பத்ரி இயக்கும் புதிய படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹனிரோஸ் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். க்ரைம் தில்லார்ஜானரில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ஜெய் சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பைநிறைவு செய்த படக்குழு விரைவில் படத்தின் தலைப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)