/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_304.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஜெய், சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்நடிப்பில் கடைசியாக வெளியான 'கேப்மாரி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத்தொடர்ந்துஇயக்குநர் சுசீந்திரன் இயக்கும் 'சிவசிவா' படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ஜெய் இசையமைப்பாளராக புது அவதாரம்எடுத்துள்ளார்.
இதனிடையே நடிகர் ஜெய் இயக்குநர் எஸ்.கே வெற்றி செல்வன் இயக்கும் 'எண்ணித் துணிக' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணன், சுரேஷ் சுப்பிரமணியன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்நடிக்கின்றனர். வித்தியாசமான ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளஇப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் நடிகர் ஜெய் 'எண்ணித் துணிக' படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)