அழுத்தமான வசனங்களில் ஜெய்யின் வெப் தொடர் ட்ரைலர்

jai label web series trailer released

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தும், 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் பாடியும் உள்ளார்.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். 'லேபில்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரிஸில், ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப்பும் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அடையாளமாக குத்தப்பட்ட எண்ணங்களை மாற்றுவதற்காக கதாநாயகன் போராடுவது போல் படம் அமைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ட்ரைலரில் வரும், 'கூட படிக்கிற பசங்களிலிருந்து அவ்ளோ பெரிய ஆபீசர் வரைக்கும் இந்த ஏரியா காரண்ணா இப்படி தான்னு லேபில் ஒட்டீர்றாங்க...', 'எங்க அடையாளத்தை மாத்தனுன்றத்துக்காக கஷ்டப்பட்டு போராடிகிட்டு இருக்கிறோம்...', 'நான் தப்பு பண்ணேனா இல்லையான்னு முடிவு பண்ணுறதுக்கே என் ஏரியா பேர் மட்டும் போதும்ன்னு நினைக்கிறாங்கனா... மாத்த வேண்டியது ஏரியாவ இல்ல, அந்த எண்ணத்த' போன்ற வசனங்கள் அழுத்தமாக அமைந்துள்ளது.

arunrajakamaraj jai web series
இதையும் படியுங்கள்
Subscribe