Skip to main content

அழுத்தமான வசனங்களில் ஜெய்யின் வெப் தொடர் ட்ரைலர்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

jai label web series trailer released

 

தமிழில் 'கனா' மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். 'ராஜா ராணி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தும், 'கபாலி' உள்ளிட்ட சில படங்களில் பாடியும் உள்ளார். 

 

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். 'லேபில்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த சீரிஸில், ஜெய் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப்பும் நடிக்கிறார். மேலும் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  

 

இப்படத்தில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அடையாளமாக குத்தப்பட்ட எண்ணங்களை மாற்றுவதற்காக கதாநாயகன் போராடுவது போல் படம் அமைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ட்ரைலரில் வரும், 'கூட படிக்கிற பசங்களிலிருந்து அவ்ளோ பெரிய ஆபீசர் வரைக்கும் இந்த ஏரியா காரண்ணா இப்படி தான்னு லேபில் ஒட்டீர்றாங்க...', 'எங்க அடையாளத்தை மாத்தனுன்றத்துக்காக கஷ்டப்பட்டு போராடிகிட்டு இருக்கிறோம்...', 'நான் தப்பு பண்ணேனா இல்லையான்னு முடிவு பண்ணுறதுக்கே என் ஏரியா பேர் மட்டும் போதும்ன்னு நினைக்கிறாங்கனா... மாத்த வேண்டியது ஏரியாவ இல்ல, அந்த எண்ணத்த' போன்ற வசனங்கள் அழுத்தமாக அமைந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உப்பு புளி காரம்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
hotstar new series uppu puli kaaran  first look released

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அடுத்து வழங்கும் புதிய சீரிஸ், 'உப்பு புளி காரம்'. இதில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கதையுடன், இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் என்பவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் சமீபத்திய வெளியீடுகளான ஹார்ட் பீட், மத்தகம் மற்றும் லேபிள் சீரிஸ்கள், வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
hot bread web series update

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்த சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?. இத்தனை கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிஸோடுகளில் பதில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.