/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/195_19.jpg)
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் வெப் சீரிஸ் 'லேபில்'. இந்தத் தொடரில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்த சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைக்கதையை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். இவர் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெற்ற ஸ்வீட் பிரியாணி குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரிஸ் நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரிஸின் ட்ரைலர் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து இரண்டாவது ட்ரைலர் நேற்று மாலை வெளியான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரைலரில் வரும் வசனங்கள் அழுத்தமாக இருப்பதாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Follow Us