ADVERTISEMENT

அறம் பட இயக்குநருடன் ஜெய் கூட்டணி

06:32 PM Nov 08, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து ஆண்ட்ரியாவை வைத்து இப்போது ‘மனுசி’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

இதனிடையே ஜெய்யை வைத்து, ‘கருப்பர் நகரம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆர்யா அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஜெய் கோபமாக காணப்படுகிறார். மேலும் அவர் கழுத்தில் ஃபுட் பால் டாட்டு இடம்பெற்றிருக்கிறது. ஆர்.ரமேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.எஸ் பிரசாத் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT