
நடிகர் ஜெய் தனது காரில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சரை பொறுத்தியிருப்பதால், காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் காரில் பொறுத்தப்பட்டிருப்பது அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை எச்சரித்து, இனி இந்த சைலன்சரை பொறுத்தி கார் ஒட்டக்கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளனர். மேலும் இன்னொரு முறை ஜெய் இதை மீறும் பட்சத்தில் அவரது கார் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தன் தவறை ஒப்புகொண்ட நடிகர் ஜெய், காவலர் முன்பே வீடியோ ஒன்றை எடுத்து. அதில் இனி கார் ஓட்டும்போது இதுபோன்ற சைலன்சர்கள் பயன்படுத்தாதீர்கள். மீறினால் போலீசார் வாகன பறிமுதல் செய்துவிடுவார்கள் என்று என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். அதில் ஜெய்யுடன் அவரை எச்சரித்த காவலரும் இருந்தார். நடிகர் அஜித்தை தொடர்ந்து நடிகர் ஜெய்யும் தமிழ் சினிமா உலகில் கார் ரேசில் ஆர்வமாக கலந்து கொள்பவர் ஆவார். மற்றும் அதிகவேக கார் ஓட்டுனரும் கூட. இதற்கு முன்னர் இவர் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக போலீசாரிடம் சிக்கி பின்னர் நீதி மன்றத்தில் அபராதமும் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.