Skip to main content

'ஜெய் பீம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகர் சூர்யா!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

Jai Bhim

 

2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

 

இப்படம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்திவந்த படக்குழு, சூர்யாவின் பிறந்தநாளன்று யாரும் எதிர்பாராத நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. பின்னர், இப்படம் வரும் நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், 'ஜெய் பீம்' படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு இன்று (01.10.2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்