/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_36.jpg)
2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில், தா.செ. ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இந்த ட்ரைலர், வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
முன்னதாக கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜெய் பீம் படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் ஒன்றரை கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)