Jai bhim movies wins 3 awards 9th noida international film festival

Advertisment

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினாலும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்படவிழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்று வருகிறது.

அந்த வகையில், தற்போது 'ஜெய் பீம்' திரைப்படம் 9வது நொய்டா சர்வதேசத் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது. அதில், 'ஜெய் பீம்' படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், லிஜோமோல் ஜோஸுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த படத்திற்கான விருது ஜெய் பீம் படத்திற்கும்அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜெய் பீம் படக்காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம் பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலிலும்'ஜெய்பீம்' திரைப்படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.