jai bhim movie issue

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்துள்ளார். இதில், ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன், ஜோஷிகா மாயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2டி எண்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம் படம் அனைவரின் பாராட்டுகளைபெற்றாலும் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Advertisment

ஜெய் பீம் படம் 90 களில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது போல காட்சிப்படுத்தஅவர்வீட்டின் சுவரில் ஒரு காலண்டர் மாட்டப்பட்டிருக்கும். ஆனால் உண்மை சம்பவத்தில் வரும் காவல்துறை அதிகாரி வேறு சமூகத்தை சேர்ந்தவர்என்பதால், படக்குழுவின் இச்செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து அந்த காலண்டரில் மாற்றம் செய்த படக்குழு, அந்த இடத்தில் லட்சுமி பட காலண்டரை பொருத்தியுள்ளது.

Advertisment