/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jai_10.jpg)
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தில்ரஜிஷா விஜயன், லியோ மோல் ஜோஸ், மணிகண்டன், ஜோஷிகா மாயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா விமர்சகர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், 'ஜெய் பீம்' திரைப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 'தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்' என்ற ஹாலிவுட் படத்தைப் பின்னுக்குத் தள்ளி 9.6 புள்ளிகளுடன் 'ஜெய் பீம்' திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் ‘3 இடியட்ஸ்’, ‘தங்கல்’, ‘லகான்’, ‘அந்தாதூன்’ உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மட்டுமே அதிக புள்ளிகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 'ஜெய் பீம்' திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்றதோடு முதல் இடத்தையும் பிடித்துள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் முதல் தமிழ்ப்படம் 'ஜெய் பீம்' என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)