jai bhim fame Manikandan debuts as the hero

Advertisment

விக்ரம் வேதா, காலா, ஜெய் பீம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் மணிகண்டன். மேலும் விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் மணிகண்டன் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தத்திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார். மேலும் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் 'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் உருவாகவுள்ளதாகப்படக்குழு அறிவித்துள்ளது. சென்னையைச் சுற்றி ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கத்திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஆந்தாலஜி ஜானரில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் ஒரு பகுதியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.