Advertisment

சூர்யா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

jai bhim case update

கடந்த 2021ஆம் ஆண்டு த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தில் குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன், படத்தை தயாரித்து நடித்த சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இந்தப் புகார் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இந்த உத்தரவை ரத்து செய்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் முருகேசன்.

Advertisment

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் இருவரையும் எதிர் மனுதாரர்களாக இணைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவரும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து சென்னை காவல் துறை, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

actor suriya jai bhim MADRAS HIGH COURT TJ Gnanavel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe