Advertisment

"அந்த தொடரை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை" - நடிகர் ஜெய் 

grshgs

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வழங்கும் தமிழ் இணைய தொடர் “ட்ரிப்ள்ஸ்”. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் “ட்ரிபிள்ஸ்” தொடரின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள் ஊடகம், பத்திரிக்கை மற்றும் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினர். அப்போது அந்த கலந்துரையாடலில் நடிகர் ஜெய் பேசும்போது...

Advertisment

"உண்மையாக சொல்வதென்றால் “ட்ரிபிள்ஸ்” தொடரின் படப்பிடிப்பு ஒரு இணைய தொடர் போல் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் எடுப்பதை விட படு கச்சிதமாக இருந்தது. இதன் கலைஞர்கள் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் நிறைய தகவல்களை ஆராய்ந்து, வெகு சுவாரஸ்யமானதாக உருவாக்கியுள்ளார்கள். ஒரு வெப் சீரிஸ் விரைவாக முடிந்து விடும் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இத்தொடரின் போது அது பொய்யானது. நண்பர்கள் தான் என் வாழ்வில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். அவர்கள் தான் என் வாழ்வின் முதுகெலும்பாக இருந்துள்ளார்கள். இத்தொடரிலும் ராஜ்குமார், விவேக் பிரசன்னா இருவரும் அது போலவே இருந்தார்கள். தொடரை முழுமையாக இன்னும் பார்க்கவில்லை. திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது போல் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் காண ஆவலாக உள்ளேன். இயக்குநர் சாருகேஷ் மிகத்திறமை வாய்ந்த இயக்குநர். காதல் மற்றும் காமெடி காட்சிகளை அட்டகாசமாக உருவாக்கியுள்ளார்" என்றார்.

Advertisment

jai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe