Skip to main content

'கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்கம் ரூ.10 லட்சம் தருகிறது' - ஜாக்குவார் தங்கம் ஆதங்கம்  

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
jaguar thangam

 

'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசியபோது...

 

 

"ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு 3000 தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சின்ன படத்திற்கு மூன்று  தியேட்டர்கள் தான் கிடைக்கின்றன இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நான் பேசி உள்ளேன். பெரிய பட தயாரிப்பாளர்களுக்கு சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து மற்றவர்களுக்கும் அவர்கள் வழி விட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்கம் ரூ.10 லட்சம் தருகிறது. அதேபோல இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும். இந்த அரசாங்கம் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜாக்குவார் தங்கம் வெற்றி

Published on 10/06/2018 | Edited on 11/06/2018
jacu

 

தென்னிந்திய திரைப்பட  மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேர்தலில் ஜாக்குவார் தங்கம் வெற்றி பெற்றார்.  பொற்கால அணி சார்பில் போட்டியிட்ட   ஜாக்குவார் தங்கம் 50 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.