Skip to main content

“அஜித் உடன் பிரச்சனை.. ஜாக்கிசான் பாராட்டு.. விஜய்க்கு கட்அவுட்..” – சுவாரசியம் பகிரும் ஜாக்குவார் தங்கம்

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

JT

 

சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கி பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாக்குவார் தங்கம், தமிழகத்தில் உள்ள பிரபல நடிகர்களுடனான தனது அனுபவத்தை பற்றி நமது நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அனுபவம் பகிர்ந்து வருகிறார். அதில் அவர் கூறிய சுவாரசிய தகவல்கள் பின்வருமாறு…

 

விஜயகாந்த் உடனான பயணம்

வெற்றி விழா படத்தில் நான் கம்போசராக இருந்தேன். சண்டையாளராக இல்லை. காரணம் விஜயகாந்த் உயரம். நான் உயரம் கம்மி. என்னை கம்போசிங் செய்ய ஆம்பூர் பாபு கூட்டிட்டு போவார். அதில் இருந்து நல்ல பழக்கம். அப்போது விஜயகாந்த் தி.நகரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தார். அவரும் ராவுத்தர் அண்ணனும் கூட இருப்பார்கள். குத்துவரிசை, சிலம்பம் கற்றுக்கொள்ள என்னை பயிற்சிக்காகக் கூப்பிட்டார்கள். அவர் சண்டை போடும் போது எதார்த்தமாக இருக்குற மாதிரி இருந்தது. அதை நான் ஸ்டைலாக கற்றுக்கொடுத்தேன். இன்னைக்கு கூட பழைய படங்களை பார்த்தால் கூட விஜய், சரத்குமார், சத்யராஜ், பிரசாந்த், முரளி, அர்ஜுன் இவர்களெல்லாம் என்னுடைய ஸ்டைல் ஆகத்தான் இருக்கும். 

 

விஜயகாந்திடம் எனக்கு என்ன ரொம்ப பிடிக்குமுன்னு சொன்னால், போனவுடன் டிபன் கொடுப்பார். நான் குன்றத்தூரில் இருந்து வருவேன். எனக்கு மட்டும் இல்லை. நிறைய உதவி இயக்குனருக்கும் கொடுப்பார். நான் சொன்னேன், எம்.ஜி.ஆர். அதையே தான் பண்ணுவார். அதேபோல் இவரும் ஃபாலோ பண்ணுனார். இன்னும் உயர்ந்த நிலைக்கு அவர் வந்த பிறகு இலவசமாக ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்களைக் கட்டினார். காலை ஆறிலிருந்து ஒன்பது வரைக்கும் மக்களுக்கு உதவுவதற்கு செக் கொடுக்க வெயிட் பண்ணுவார். ரொம்ப பிடிச்சு போச்சு. நான் எதையும் எதிர்பாராமல் நடிகர் சங்கத் தேர்தலில் அவருக்கு நிறைய ஒர்க் பண்ணினேன். என் பையன் கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க அவரை பார்க்க சென்று இருந்தேன். பெரிய தயாரிப்பாளர்கள், முக்கியப் பிரபலங்கள் எல்லாம் வந்து இருக்காங்க. எங்களைப் பார்த்து விட்டு, அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை அவர் கூப்பிட்டதும் ஒரே ஆச்சரியம். அவருக்கு யோகா எல்லாம் கற்றுக்கொடுத்தேன்.  

 

விஜய்க்கு ஒரு கட் அவுட்

நான் ஜிம் திறக்கும் போது, பெரிய ஹீரோவிடம் கேட்டேன். அவர் வரேன்னு சொல்லி மூன்று மாதம் அலைக்கழித்து விட்டார். பின்பு அவர் வரவில்லை. அப்புறம் தான் நான் ஜிம் திறக்க விஜயகாந்த் சாருக்கு போன் போட்டேன். பிலிம் சிட்டி வா-னு சொன்னார். ஒன்னும் இல்ல அண்ணா, ஜிம் ஓபன் பண்ணனும் சொன்னேன். எப்போனு கேட்டார். அந்தத் தேதியை சொன்னேன். ஆனா அந்தத் தேதியில் அவருக்கு ஷூட்டிங் இருக்கு. அவரது உதவியாளரிடம், “என்ன சுப்பையா... அன்னைக்கு எங்க ஷூட்டிங்”னு கேட்டார். எத்தனை மணிக்கு வர வேண்டும் கேட்டு விட்டு, சரி நான் வந்து விடுகிறேன் என்றார்.

 

அப்புறம், விஜயையும் கூப்புடுறேன்னு சொன்னேன். தம்பிய கூப்டுனு சொன்னார். சரின்னா என்றேன். விஜய்க்கு போஸ்டர் அடி எனக்கு அடிக்காதனு சொன்னார். சரி அண்ணா, என்றேன். அவருக்கு ஒரு கட்அவுட், விஜய்க்கு ஒரு கட்அவுட் வைத்தேன். இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், அன்பு, பாசம்,பண்பு நிறைந்த மனிதர். யாருக்கு உதவினாலும் செய்வார். விஜயகாந்த் எதிரியாக இருந்தாலும் உதவி செய்வார். எனக்காக நிறைய வேட்டி கட்டி சண்டை எல்லாம் செய்துள்ளார். எப்ப பார்த்தாலும் என்னை வாஞ்சையோடு, அன்போடு கூப்பிடுவார். 

 

விஜய் சாருக்கு போன் பண்ணேன். அவர் அப்போது மகாபலிபுரத்தில் சூட்டிங்ல இருந்தார். என்ன விஷயம்னு கேட்டார். உங்கள பாக்கணும் என்றேன். போன்லயே பேசுங்க என்றார். பாக்கணும் போல இருக்குனு சொன்னேன். சரி, வாங்க என்றார். போனவுடன் சொன்னேன் ஜிம் ஓபன் பண்றேன் நீங்க வரணும் என்றேன். யாரு எல்லாம் வராங்கனு கேட்டார். விஜயகாந்த் வராருனு சொன்னேன். எனக்கு போஸ்டர் அடிக்காதீங்க, விஜயகாந்துக்கு போஸ்டர் அடிங்கன்னு சொல்லிட்டார். நான் குழம்பி விட்டேன். வரமாட்டிங்களா ரெண்டு பேரும் என்றேன். கண்டிப்பாக வருவேன் என்று சொன்னார். நல்லநேரம் பார்த்து மாலை ஆறு மணிக்கு தான் திறப்புவிழா. விஜய் மூனே முக்கால் மணிக்கே வீட்டுக்கு அருகில் வந்து காத்திருந்தார். போலீஸ் வேற, எங்கள் கூட்டத்தைப் பாத்து அனுமதி வாங்கிட்டீங்களா என்றனர். நான் உடனே அனுமதி சீட்டை காட்டினேன். 

 

சென்னைல சொந்தபந்தம் எனக்கு நிறைய பேர் இருக்காங்க. நான் ஒரு நூறு பேரை பாதுகாப்புக்காக வைத்து இருந்தேன். நல்ல நேரம் பார்த்து தான் ஸ்டார்ட் பண்ணினேன். விஜய் வண்டி மாதிரி இருக்கு அண்ணானு என் நண்பர் சொன்னார். நான் உடனே சென்று அவரிடம், என்ன சார்னு கேட்டேன். உங்கள தொந்தரவு செய்ய கூடாது தான்-னு சொன்னார். ஒருவேளை ஆறு மணிக்கு புறப்பட்டால் எட்டு மணிக்கு தான் வர முடியும்னு நினைத்து அவரும் முன்னாடியே வந்து விட்டார். அந்த அன்பை பாருங்கள். பெருந்தன்மையை பாருங்கள். கேப்டன் வந்தாரு. விஜயசாந்தி, ராமராஜன், பாண்டியராஜன், மும்தாஜ், வடிவேலு, விவேக் எல்லாரும் வந்தாங்க. எல்லோருக்கும் என் மேல அவ்வளவு அன்பு. எதையும் நான் எதிர்பார்ப்பது இல்லை. அவங்களுக்கு என்ன தேவையோ அதை முன்னாடி இருந்து செய்வேன். மக்கள் எல்லோரும் அதை போல செய்ய வேண்டும்.

 

அஜித் உடனான  அனுபவம்...

நான் பகைவன்-னு ஒரு படம் பண்ணுனேன். அதற்கு முன்னாடி அவரோடு ஒரு படம் பண்ணினேன். எக்மோரில் ஒரு சண்டைக்காட்சி. லாரி ஒன்று நிற்கும். அதன் மேல் ஏறி, அப்போது கயிறு எல்லாம் பயன்படுத்துவது இல்லை. அப்போது மேக்கப்மேன் வந்து சொன்னார், அஜித்துக்கு முதுகு தண்டுவட ஆபரேஷன்-னு சொன்னார். நான் உடனே அந்த சண்டை காட்சியை தவிர்க்கலாம் என்று செல்லும் போது, அஜித் வந்து மாஸ்டர் ஒரு நிமிடம் என்றார். என்ன சார்னு கேட்டேன். இந்த சீன் நல்லா இருக்கு, எடுத்துக்கலாம்னு சொன்னார். அப்புறம் எடுத்துக்கலாம் என்று நான் சொன்னேன். நான் பண்றேன்னு சொல்லிட்டு, அவர் பண்ணார். அது அவரின் தன்னம்பிக்கை. உயிர் போனால் கூட வீரத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆபரேஷன் செய்து ஒரு மாதம் தான் ஆகி உள்ளது. இந்த அளவுக்கு இருக்கும் போது,  நடக்கவே முடியாது. ஆனால் அந்த சண்டைக்காட்சியை நடித்து கொடுத்தார். அப்போது இருந்தே எனக்கு அவர் மேல் நல்ல அபிப்ராயம். நல்ல வசதி இருந்தாலும் வீட்டில் அமராமல் இப்பவும் கூட ரேஸ் போயிட்டு தான இருக்கிறார். 

 

அதே மாதிரி, விஜய் சார் ஷாஜகான் படத்தில், ஓடுற ரயிலில் ஒரு கிக் அடித்தார். அதை தியேட்டரில் ஒன்ஸ்மோர் கேட்டார்கள். சும்மா எல்லாம் இன்னைக்கு  சூப்பர்ஸ்டார் மாதிரி எல்லாம் ஆக முடியாது. அவ்வளவு உழைத்தார்கள். தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் மாதிரி தான். எல்லோருமே உழைத்தார்கள். உழைத்தவர்கள் மேலே இருக்கிறார்கள். உழைக்காதவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். 

 

அஜித் உடனான பிரச்சனை..... 

அவருதான் என்னை விட பெரியவர். கலைஞரை தவறாக பேசியதாக நான் ஒரு அறிக்கை விட்டேன். அதனால் அவர் இல்லாமல், அவர் சார்பாக யாரோ எங்க வீட்டுக்கு வந்து கார் கண்ணாடியை உடைத்து விட்டார்கள். சரத்குமார், ராதாரவி எல்லாம் கலந்து பேசி சமாதானம் ஆகினோம்.  கலைஞரும் அழைத்து பேசினார். யாரோ பண்ண தப்புக்கு அவர் ரொம்ப வருத்தம் தெரிவித்தார். அவர் பெரிய மனிதர் தான், யாரும் மறுக்க முடியாது. உழைப்பால் உயர்ந்தவர். நான் அவருடன் இன்னைக்கு வர நல்லா தான் பேசிக்கொண்டு இருக்கிறார். 

 

ஜாக்கி சான்  உங்களை பாராட்டியது...

நான் ஜாக்கி சானின் மிகப்பெரிய ரசிகன். அவர், மைசூருக்கு ஒரு படப்பிடிப்புக்கு வருகிறார். நாங்களும் விஜயசாந்தியின் தெலுங்கு  படத்திற்காக மைசூர் செல்கிறோம். நான் ஜாக்கி சானை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலம்பத்தை சுற்றி காட்டினேன். கிக் எல்லாம் பண்ணுனேன். அதனை பார்த்தவுடன், என்னை அப்படியே வந்து கட்டிப்பிடித்து பாராட்டி முத்தம் குடுத்தார். அவர் உலக சூப்பர்ஸ்டார். மறக்க முடியாத நிகழ்வு. என்னை எம்.ஜி.ஆர். இந்தியன் புரூஸ்லீ என்று தான் கூப்பிடுவார். என்னுடைய உடம்பு கல்லு மாதிரி இருக்கும். அவரும் அதே மாதிரி சொன்னார். ரொம்ப லைக் பண்ணுனார். எங்க நாட்டில் கூட இது மாதிரி சுற்ற ஆட்கள் இல்லை என்று சொன்னார். அவர் சிலம்பத்தை பற்றி எல்லாம் சொன்னார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதனை நம்ம நாட்டுக்கு கிடைத்த பெருமையாகவும், தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகவும் நினைத்தேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும், உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நினைத்தேன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.