ரிச் மூவிஸ் - டிஎஸ்கே மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் மணவாளவன் செந்தில், புதுவை ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் இசை அமைப்பாளர் திவாகர், காண்டியப்பன், அன்னகொடி கன்னன, வர்ணிகா, முபாரக் அலி, ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் ஏகலைவன் ஜாகுவார் தங்கம் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம் பேசியதவாது, “குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி சிலர் வருவாய் காண்கிறார்கள், கர்நாடகவில் இன்று வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை, அன்றைய திரைப்படப்பிடிப்பில் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவே இந்த நிலை மாற வேண்டும். கடைசியில் இளைஞர்கள் யாவரும் மது அருந்தி உடலை வருத்திக்கவேண்டாம், உடல் தான் உங்கள் சொத்து எனவே உடலை பாதுகாத்து கொள்ளுங்கள்” என்றார். இறுதியில் தமிழ் வாழ்க என்று உறக்கமிட்டு உரையை முடித்தார்.
Follow Us