Advertisment

பிரபாஸுடன் மோதும் விஸ்வாசம் பட வில்லன்... புதிய போஸ்டர் வெளியீடு!

Jagapathi Babu

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் 'சலார்' படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

Advertisment

'கே ஜி எஃப்' படத்தின் இரு பாகங்களுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இயக்குநர் பிரசாந்த் நீல் 'சலார்' படத்திற்காக மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு, 'ராஜமன்னார்' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்திற்கான சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிரட்டலான தோற்றத்தில் ஜெகபதி பாபு காட்சியளிக்கும் இந்த போஸ்டர், படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.

Advertisment

படத்தின் தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூர் ராஜமன்னார் போஸ்டர் குறித்து கூறுகையில், "சலார் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நடிகர் ஜெகபதிபாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மிரட்டலாக அமைந்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு ராஜமன்னார் கதாபாத்திரம் குறித்த கற்பனை கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். இப்படத்தின் திரைக்கதையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் இந்த கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை போஸ்டராக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

jagapathi babu salaar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe