gsdgsdgs

Advertisment

தமிழில் ‘லிங்கா’, ‘பைரவா’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ‘மகா சமுத்திரம்’‘ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அழைத்தபோது நடிகர் ஜெகபதி பாபு மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் ஷூட்டிங்குக்கு செல்ல அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. ஜெகபதி பாபுவின் இந்த திடீர் முடிவால் ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.