/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/57_6.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, படக்குழு சென்னை திரும்பியது.
எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்க முடிவெடுத்தார் இயக்குநர் சிவா. அதற்காக, சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அண்ணாத்த படத்தில் நடிகர் ஜகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜகபதி பாபு, இயக்குநர் சிவா இயக்கத்தில், கடைசியாக வெளியான 'விஸ்வாசம்' படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)