Advertisment

"அது எங்க வீட்டு மாப்பிள்ளை இல்லை, ஏமாத்துன மாப்பிள்ளை" - ஆர்யாவை விமர்சித்த தொகுப்பாளர்!

arya

சமீபத்தில் தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற ரியாலிட்டி ஷோ நடந்து வந்தது. அதில் நடிகர் ஆர்யா பங்குபெற்று தனக்கான மனப்பெண்ணை தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில மாதங்களாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் நடிகர் ஆர்யா அதில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் அனைவருக்கும் ஏமாற்றமளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் பல பெண்கள் அமைப்புகள் சார்பாக ஆர்யா மீதும், அந்த நிகழ்ச்சி மீதும் வழக்குகளும் தொடரப்பட்டன.

Advertisment

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போதும் பின்னர் சர்ச்சைகளாலும் சில காலம் வெளியே வராமல் இருந்த ஆர்யா, இன்று நடைபெற்ற 'மிஸ்டர் சந்திரமெளலி' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் படக்குழுவினர், சூர்யா, விஷால், சாந்தணு, இயக்குநர்கள் சுசீந்திரன், கவுரவ் நாராயணன், கார்த்திக் முத்துராமன், நண்டு ஜெகன், உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பலரும் ஆர்யா பங்குபெற்ற 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் ஆர்யாவின் முடிவை பயங்கரமாக கிண்டல் செய்தனர்.

Advertisment

அப்போது நடிகர் கார்த்திக் இந்த நிகழ்ச்சி குறித்து பேசும்போது, "சீக்கிரமே நீங்க (ஆர்யா) கல்யாணம் பண்ண போறீங்க... வாழ்த்துக்கள்" என்று சொல்ல அப்போது நண்டு ஜெகன் குறுக்கிட்டு, "ஆர்யா அதில் எந்த பெண்ணையும் தேர்வு செய்ய வில்லை" என சொல்லி மேலும் அது... "எங்க வீட்டு மாப்பிள்ளை இல்லை, ஏமாத்துன மாப்பிள்ளை" என்று ஆர்யாவை கிண்டல் செய்தார். மீண்டும் நடிகர் கார்த்திக் பேசும்போது... "அந்த நிகழ்ச்சி உண்மையில் பெண் பார்க்கும் படலமா அல்லது வெறும் கண் துடைப்புக்கான நிகழ்ச்சியா?" என்று கேட்க, அதற்கு மீண்டும் குறுக்கிட்ட நண்டு ஜெகன்... "அதில் வரும் அனைத்தும் உண்மை தான்..ஆனால் ஆர்யா அதில் பங்கேற்ற பெண்ணை தேர்ந்தெடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றார்.

இதையடுத்து நடிகர் விஷால் இது குறித்து பேசும்போது.. "நானும், நடிகர் கார்த்திக் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் உண்மையில் பெண் பார்க்கிறீர்களா இல்லையா என்று பல முறை கேட்டிருக்கிறோம். அதற்கு இது வரை எங்களுக்கே பதில் தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் உண்மையில் என்ன நடந்தது என்று ஆர்யா தான் கூற வேண்டும். அவர் எப்பொழுதும் சும்மா செய்யும் வேலையை அந்த நிகழ்ச்சியில் காசு கொடுத்து செய்ய வைத்திருக்கிறார்கள்" என்று கிண்டலாக கூறினார்.

இவ்வாறு திரைப்பட நட்சத்திரங்கள் ஜாலியாக எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியை உண்மையென நம்பிப் பார்த்தவர்கள்தான் பாவம் போல...

arya engavettumapillai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe