அண்மையில் வெளியாகி 100 கோடி வசூலை ஈட்ட படம் மிஷன் மங்கள். இந்த படத்தில் வித்யாபாலன், அக்ஷய் குமார், சோனாக்சி சின்கா, டாப்சி, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்திய விண்வெளி வரலாற்றில் ‘மங்கள்யான்’ விண்ணில் செலுத்தப்பட்டது முக்கியமான நிகழ்வு. அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இப்படம். கடந்த வருடம் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியான இந்த படத்தை தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கி இருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jagan-shakti.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இவர் சீனிகம், ஷமிதாப் உட்பட படங்களை இயக்கிய ஆர்.பால்கியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிஷன் மங்கள் படம் ஹிட்டானதை அடுத்து பாலிவுட்டில் கவனிக்கப்பட்டார். தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்ஹிட்டான கத்தி படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்வதாக இருந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இதனால் ஜெகன் சக்தி அடுத்த படத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தினார்.
இந்தநிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை அறிந்தனர். மிகவும் சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)