/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E2jIoGUVcAEOhTR.jpg)
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து தமிழில் உருவாகிவுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘நேத்து...’ என்கிற பாடல் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகர் தனுஷ் எழுதி, பாடியுள்ள 'நேத்து..' பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான ‘ரகிட ரகிட...’, ‘புஜ்ஜி...’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)