Published on 01/05/2020 | Edited on 01/05/2020

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'ஜகமே தந்திரம்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் (இன்று) மே 1- ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதி காரணமாகத் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரைப் படக்குழு பட ரிலீஸ் தேதியாக அறிவித்த இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ''ஜகம் (உலகம்) குணமான பிறகு விரைவில் திரைக்கு வரும்'' எனப் பதிவிட்டுள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.