dhanush jagame

'பட்டாஸ்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்' படம் ரிலீஸாகுவதாக இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருட இறுதிக்குள்ளாகவே வெளிநாடுகளில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது.

Advertisment

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

Advertisment

இந்நிலையில் வருகிற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை அப்டேட் விட இருப்பதாக தெரிவித்திருந்தது. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்த ரகிட ரகிட என்னும் பி.ஜி.எம்மை, முதல் ட்ராக் ரிலீஸாக தனுஷின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisment