dhanush jagame thanthiram

‘பட்டாஸ்' படத்தைதொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்' படம் ரிலீஸாவதாக இருந்தது. இந்தபடத்தின் ஷூட்டிங் கடந்த வருட இறுதிக்குள்ளாகவே வெளிநாடுகளில் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது.

Advertisment

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.

Advertisment

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போது ‘ரகிட ரகிட’ எனும் முதல் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. மோஷன் பிக்சர் ரிலீஸாகும்போது அனைவரையும் கவர்ந்தது இந்த ரகிட ரகிடபி.ஜி.எம்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தபடத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.