jagabathi babu real estate issue

Advertisment

தெலுங்கில் பல்வேறு படங்களில் 35 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் ஜகபதி பாபு. தமிழில் லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமானார். இப்போது சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ரியல் எஸ்டேட் தொழிலில் இப்போது மோசடிகள் அதிகம் நடக்கிறது. இது குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்திருந்தேன். அவர்கள் என்னையும் ஏமாற்றிவிட்டார்கள்.

அவர்கள் யார்? என்ன நடந்தது? என்பதை விரைவில் சொல்கிறேன். நிலம் வாங்கும் முன் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள். யாருடைய மோசடி வலையிலும் வீழ்ந்துவிடாதீர்கள்” என்றுபகிர்ந்துள்ளார். முன்னணி நடிகருக்கு இது போல் நடந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.