bfbsfbsfbsd

Advertisment

'நான் ஈ' பட புகழ் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படம் ‘விக்ராந்த் ரோணா’. இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் நடிகர் கிச்சா சுதீப் திரைத்துறையில் நுழைந்து25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில்'விக்ராந்த் ரோணா' படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 180 நொடிகள் கொண்ட ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இப்படம் குறித்து நடிகர் கிச்சா சுதீப் பேசும்போது...

"ஒரு படத்தை துவங்கும்போது இருக்கும் அதே உற்சாகம், முடிவிலும் இருப்பது அரிதானது. ஆனால் ‘விக்ராந்த் ரோணா’படத்தில் பணியாற்றும் அனைவரிடமும் அந்த உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதைக் காண பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் அவர்களது இடையறாத உழைப்பிற்கும், பெரும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் அவர்களின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது நடனம் என்னையும் நடனமாட வைத்துள்ளது. அவரது வரவு படக்குழுவில் மேலும் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது. அவரதுநேர்மறை உணர்வை இன்னும் அதிகமாக பரப்பட்டும்" என்றார்.

மேலும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்இப்படம் குறித்து பேசியபோது.. "உலகிற்கு தனித்துவமான ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பும், ஒரு கனவுப்படைப்புதான் ‘விக்ராந்த் ரோணா’.இதுபோன்ற ஒரு மகத்தான படைப்பின் உருவாக்கத்தில் நானும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திரையரங்குகளில் மீண்டும் கோலாகல கொண்டாட்டத்தை உருவாக்கும் படமாக இப்படம் இருக்கும்" என்றார்.

Advertisment

படத்தின் மிக முக்கியமான ஒரு நடனக் காட்சித்தொகுப்பு, ரூபாய் 6 கோடி பொருட்செலவில் மிகப்பிரம்மாண்ட அரங்க அமைப்பில், 300 நடன கலைஞர்கள் பங்களிப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டர் அமைத்திருக்கும் இந்த நடனக் காட்சி இந்த வருடத்தின் மிகப்பெரும் டான்ஸ் நம்பராக புகழ் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் தமிழ் பதிப்பில் தனது சொந்த குரலில் பேசும் முயற்சியில் உள்ளார். பிரம்மாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும்'விக்ராந்த் ரோணா' திரைப்படம்3டி பதிப்பில் 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படப்புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக்மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.