Jacqueline Fernandez gets bail in Rs 200 crore money laundering case

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாகத்தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவந்தது. டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப் பத்திரிகையைத்தாக்கல் செய்தது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்ததோடு, அவர் வெளிநாடு தப்பித்துச் செல்வதைத்தடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆஜராகி தொடர்ந்து பலமுறை விளக்கமளித்து வந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் நடந்தபோதுடெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பலமுறை விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஏற்கனவே விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தன்னை காவலில் வைக்கத்தேவையில்லை என்று கூறி ஜாமீன் கோரியிருந்தார்.

இந்நிலையில் நடிகைஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் பிணைத்தொகை 2 லட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளது.