Jacqueline Fernandez appeared person third time Rs 200 crore fraud case

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திவந்தது. சமீபத்தில் கூட டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்ததோடு, அவர் வெளிநாடு தப்பித்து செல்வதை தடுக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே இரண்டு முறைடெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் இன்று மீண்டும் மூன்றாவது விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாகஜாக்குலின் ஃபெர்னான்டஸிடம்நடைபெற்று வரும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டிவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்த வழக்கு தொடர்பாகநடிகை நோரா ஃபதேஹியிடம்7 மணி நேரம்டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.