/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jacquiline-fernandez.jpg)
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். 2006 ஆம் ஆண்டு இலங்கை சார்பாக மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் பங்கெடுத்து பட்டத்தை வென்றார். இதன்பின் இந்தி திரையுலகில் அலாதீன் என்ற படத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஹவுஸ்புல் 2, ரேஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். சல்மான்கானோடு இவர் நடித்த கிக் பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கிக் 2 படத்திலும் சல்மான்கானோடு நடிக்கவுள்ளார். மேலும் பூத் போலீஸ் ,சர்க்கஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஜாக்குலின்.
இந்த நிலையில் தசரா விழாவை முன்னிட்டு தனது பணியாளர் ஒருவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்து அசத்தியுள்ளார் ஜாக்குலின். இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த காருக்கு பணியாளர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்த, அவருக்கு பூஜை செய்ய உதவுகிறார் ஜாக்குலின். அவர், அந்த வீடியோவில் போக்குவரத்துக்கு காவலர் உடையில் இருக்கிறார். அது அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் வேடம் என கூறப்படுகிறது. ஜாக்குலின் தனது பணியாளருக்கு கார் பரிசளித்ததை பார்த்த ரசிகர்கள், அவரை பாராட்டிவருகின்றனர்.
ஜாக்குலின் தனது பணியாளருக்கு கார் பரிசளிப்பது, இது முதல்முறை அல்ல. ஏற்கனவே சென்ற ஆண்டு தனது மேக்கப் ஆர்டிஸ்டுக்கு காரை பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)