அதிரடி ஆக்ஷன் கிங் என உலக சினிமா ரசிகர்களால் அறியப்படுவர் ஜாக்கி சான். இவரது நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் 'வான்கார்ட்'. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாக இருந்த இப்படம், சீனாவில் ஏற்பட்ட கரோனா நெருக்கடி காரணமாகத் தள்ளிப்போனது.
கரோனா நெருக்கடி சற்று தளர்ந்த பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் இப்படம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் மொழிமாற்றம் செய்யப்பட்டபதிப்பும் பல்வேறு மொழிகளில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில், வான்கார்ட் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றப்பதிப்பானது கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி, வெளியாக உள்ளது. அதற்கு முன்பாக வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் நாளை வெளியிட உள்ளார்.