Advertisment

''பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்தோடும் இருங்கள்” - ஜாக்கிசான் வேண்டுகோள்!

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

fsf

அந்த வரிசையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதில்... ''எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அணைத்து ரசிகர்களுக்கும் நன்றி. கரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். இதுவே எனது பிறந்த நாள் விருப்பமும் ஆகும். உலக அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுகிறேன். பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருங்கள்”எனக் கூறியுள்ளார்.

jackiechan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe