Advertisment

தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஜாக்கி சான் எச்சரிக்கை! 

jackie chan

ஹாங்ஹாங் திரையுலகைச் சேர்ந்த சீன நடிகரான ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய படங்களில் சண்டையுடன் கலந்த காமெடி காட்சிகளைப் பார்க்கவே பலரும் விரும்புவார்கள்.

Advertisment

இளம் வயதில் டூப் இல்லாமல் மிகவும் கடுமையான சண்டை காட்சிகளில் ஜாக்கி சான் நடித்தது அவரது ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது .தற்போது 66 வயதாகிறது. தற்போதுவரை எவ்வளவு சிரமமான சண்டை காட்சிகள் என்றாலும் டூப் இல்லாமலே நடித்து வருகிறார்.

Advertisment

ஜாக்கி சான் புதிதாக நடித்து வரும் படம் 'வேன்குவார்ட்'. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போது,தவறுதலாக வெள்ளத்தில் சிக்கி பின்னர் பாதுகாவலர்களால் மீட்கப்பட்ட வீடியோ காட்சி வைரலானது.

இந்நிலையில், ஜாக்கி சானின் நிறுவனக் குழுமத்துடன் இருக்கும் நிறுவனங்கள் எனக் கூறி பல போலி அறிவிப்புகளால் ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகிறது. அதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஜேசி க்ரூப்ஸ் சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Ad

ஜாக்கிசானின் நிறுவனப் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும், தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

jackiechan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe