உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jackie chan_0.jpg)
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்றாயிரத்தைக்கடக்கவுள்ள நிலையில் 68 பேர் இந்தத் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உலகளவில் பிரபலமான நடிகர் 'ஜாக்கி சான்' கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அனைவருக்கும் இது மிக கஷ்டமான காலம்.நாம் கரோனா வைரஸ் என்ற ஒரே பிரச்சனையைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.நாம் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும்.நமது அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்கவேண்டும்.ஒருவேளை நீங்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள்.கைகளை அடிக்கடி கழுவுங்கள்.பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள்.நமக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஜெய் ஹோ” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us