''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்!

izabelle leite

பாகிஸ்தானில் 97 பயணிகளுடன் சென்ற எர்பஸ் எ-320 ரக விமானம் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது குடியிருப்பு பகுதி அருகே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த 97 பயணிகள் நிலை என்னவானது என்ற தகவல் இதுவரை முழுமையாகத் தெரியவில்லை. இதுவரை 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி குடியிருப்புப் பகுதி என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களும் இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இதற்குப் பிரதமர் மோடி உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' பட நாயகி இசபெல் லைட் இந்த விபத்து குறித்து சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்... ''இந்தச் செய்தியைக் கேட்டதும் என் இதயம் நொறுங்கிவிட்டது. என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது பாகிஸ்தான். வலுவாக இருங்கள். அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் கடவுள் பலம் அளிப்பார்'' என இரங்கல் தெரிவித்துள்ளார்.

izabelle leite vijay devarakonda
இதையும் படியுங்கள்
Subscribe