/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/191_20.jpg)
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதிமாறன்’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், பாவா செல்லதுரை, உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது, “இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக் கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள்.உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான். அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார். என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, “ஒரு அற்புதமான கதைக்களம். நாயகனுக்காகக் கதை எழுதும் காலத்தில் கதாபாத்திரத்திற்காக நாயகனைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் மந்திராவுக்கு வாழ்த்துகள். பாலாவின் உதவியாளர் மிக தைரியசாலியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துகள். நாயகன் வெங்கட் உயரம் தான் குறைவு உள்ளம் உயரமானது. உயர்ந்த உள்ளம் கொண்டிருக்கிறார். உயரமாய் இருந்து என்ன பிரயோஜனம், ஒன்றுமில்லை. நம் தமிழ் நாட்டை வளப்படுத்திய அண்ணா உயரம் குன்றியவர். உலகம் போற்றிய அப்துல் கலாம் உயரம் குன்றியவர் தான். அழகென்பது உடலில் அல்ல, அவன் செய்யும் செயலில் இருக்கிறது. படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம். வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் என் வாழ்த்துகள். இவர்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்துள்ளார்கள். அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்றார்.
இவானா பேசியதாவது, “என்னோட டீம் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். 3 வருடமாகச் செய்த படம். இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. மந்திரா அண்ணாவை நாச்சியார் டைமில் இருந்து தெரியும். அப்போது தொடங்கிய நட்பு, இண்டஸ்ட்ரி பத்தி எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக்கதை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார். இந்தப்படம் பாடிஷேமிங் பத்தி பேசியுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)