Advertisment

ட்ரீம் செல்ஃபி - புகைப்படத்தை வெளியிட்ட மோகன்.ஜி

'It's a Dream selfie' - mohan.g shared a picture with a selvaraghavan

Advertisment

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கி பிரபலமானவர் மோகன்.ஜி. இதனை தொடர்ந்து தற்போது 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த பதிவில், "இது ஒரு ட்ரீம் செல்ஃபி... நன்றி செல்வராகவன் சார், இந்த ட்ரீம் தருணத்தை ஏற்படுத்தியதற்கு" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் படப்பிடிப்பு நிறைவுசெய்த போது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் துள்ளலான பாடல் காட்சியையும் அதோடு 98 சதவீத படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம் என மோகன்.ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மோகன்.ஜி பதிவை செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் அரவணைப்பு மற்றும் பாசம்உண்மையில் என்னை நெகிழ வைத்தது. உங்களுடனும் உங்கள் சிறந்த குழுவினருடனும் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

mohan g selvaraghavan
இதையும் படியுங்கள்
Subscribe