Advertisment

"இது சினிமால ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு... "- நடிகர் பரத் பேச்சு 

publive-image

நடிகர் பரத் மற்றும் நடிகை வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (04/11/2022) நடைபெற்றது.

Advertisment

விழாவில் பேசிய நடிகர் பரத், "ஒவ்வொரு படத்தோட ஆடியோ ரிலீஸ் ஆரம்பிக்கும்போது, அந்த படத்தோட ஜார்னி ஒன்னு இருக்கும். எடுத்தோனே,இமிடியெட்டா ஆரம்பிச்சோம், அந்த படத்த ரிலீஸ் பண்ணுனோம்கிறது என் லைஃப்ல நடந்ததே இல்ல. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஜார்னி இருக்கும். அதுல வந்து, ஒரு டைரக்டர் கதை சொல்லி;அந்த கதை எனக்கு புடிச்சு; அந்த டைரக்டருக்கு சம்டைம் புரொடியூசர் இல்லாம;திருப்பி, நான் உட்கார்ந்து என்னோட கான்டேக்ட் லிஸ்ட்லாம் நோண்டி;எந்த புரொடியுசர் என்னனு;இல்ல, சம்டைம்ஸ் அந்த டைரக்டருக்கு புரொடியூசர்ஸ் இருப்பாங்க,ஆனா கதை எனக்கு புடிக்காது.

Advertisment

சார் வேற எதாவதுபடம் பண்லாமானு, அந்த புரொடியூசர்ட்ட கேட்டா, இல்ல சார் இந்த கதை தான் பெஸ்ட் கதை. இத தான் படமா பண்றோம்பாங்க. நல்ல கதை இல்லனு தெரிஞ்சு நான் போக முடியாது. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஹிஸ்ட்ரி இருக்கு எனக்கு. அப்படி ஆரம்பிச்சது தான் இந்த படம்.சக்தி வந்து கத சொன்னாரு. கத சொல்லி முடிச்சிவேற சில காரணங்களால, அவரு எடுத்துட்டு வந்த புரொடியூசரோடபடம் பண்ண முடியல. எனக்கு எப்படினா, நல்ல கதை வந்துருச்சு அப்படினாலே, அதுக்கு அப்புறம் எனக்கு தூக்கம் வராது.

ஏன்னா, அந்த கதையில நான் கதாநாயகனா இருக்கணும். ரொம்ப கேப் விட்டோம்னா, அந்த டைரக்டர் வேற எங்கேயோ ஓடிப் போயிருவாரு. இது ஒரு பெரிய பஞ்சாயத்தா இருக்கு சினிமால. இது எனக்கு மட்டுமல்ல. எல்லா ஹீரோஸுக்கும் அப்படி தான். ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரில டெல்லி பாபு சாரோட மிகப்பெரிய ப்ளஸ் என்னனா, இமிடியெட்டா ரெஸ்பான்ஸ் பண்ணுவாரு. அது யாரு, என்ன, எப்படி கேட்டகிரி எதுமே கிடையாது. நான் போன் பண்ணி, மெசேஜ் பண்ணி அடுத்த நிமிஷமே எனக்கு கால் வந்துச்சு. நான் அவருட்ட எக்ஸ்பிளைன் பண்ணன்.

பிரஜாக்ட்டோட ஸ்ட்ரக்ச்சர எக்ஸ்பிளைன் பண்ணன். சார் இப்படி இருக்கு. ஒரு புது டைரக்டர் வந்து என்னை அப்ரோச் பண்ணிருக்காரு. எனக்கு ரொம்ப புதுசாப்படுது சார். இந்த கதையோட நிறைய விசயம் புதுசா இருக்கு. சொன்ன உடனே அப்படியே யோசிச்சாரு. ‘ஐ கால் யு பேக் ஃபை மினிட்ஸ்’ அப்படினு சொல்லிட்டு, இமிடியெட்டா வந்துட்டு, எனக்கு போன் பண்ணி, நான் ஃபேக்டரில இருந்து வந்துட்டு இருக்கேன். த்ரீ ஓகிளாக் போய் கதை சொன்னாரு. கதை சொல்லி முடிச்சி, ஃபியூ ஹவர்ஸில் லாக்தி பிலிம். எதுக்கு நான் இந்த ஜார்னிய சொல்ல வரனா, இது எடுத்தஒரு டைரக்டர் கதை சொன்னாரு. உடனே அங்க போய் லாக் பண்ணி நடந்த ஒருநாள் விசயம் கிடையாது.

இது மாதிரி ஒவ்வொரு படத்துக்குமே, எனக்கு இந்த மாதிரி ஜார்னி நடந்து, ஆனா ஒரு நல்ல படம் எங்கபோய் சேருமோ, அங்கு கரெக்டா போய் சேந்துடும்" எனத் தெரிவித்தார்.

audio lanch function
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe